விபத்துக்களை குறைக்க நோக்கம் – இருசக்கர வாகனங்களுக்கு பிரத்தியேக பாதை அமைக்க தீர்மானம்
விபத்துக்களை குறைக்கும் நோக்கில், இலங்கை முழுவதிலுமுள்ள பிரதான சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கென பிரத்தியேகப் பாதைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார். இதன் முன்னோடித் திட்டம் களுவாஞ்சிக் குடியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பு குறித்துப் பேசிய அமைச்சர் ரத்நாயக்க, இலங்கையில் ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் சுமார் 2,500 பேர் உயிரிழக்கின்றனர் என்றும், 2025-ஆம் ஆண்டில் இந்த இறப்பு எண்ணிக்கை ஏறத்தாழ 2,750-ஐ எட்டும் என்றும் கூறினார். […]






