விளையாட்டு

ராஜஸ்தான், டெல்லி அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 43 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்த்து விளையாடவுள்ளது.

இப்போட்டி ஜெய்ப்பூர் சவாய்மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

கடைசியாக நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பலம்வாய்ந்த அந்த அணியை வீழ்த்திய உற்சாகத்தில் ராஜஸ்தான் களமிறங்குகிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி, இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

கடைசியாக நடைபெற்ற ஹைதராபாத், பஞ்சாப், பெங்களூரு அணிக்கெதிரான போட்டிகளில் அந்த அணி வரிசையாக தோல்வி கண்டுள்ளது.

எனவே, இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றிப் பாதைக்கு திரும்ப டெல்லி வீரர்கள் தங்களது உயர்மட்ட திறனை வெளிப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ