ஐரோப்பா

ரஷ்ய அரசு அதிகாரிகளுக்கு புடின் பிறப்பித்துள்ள அதிரடி தடை!

ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளிநாட்டு கார்களை பயன்படுத்த தடை விதித்து அதிபர் புடின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாஸ்கோவில் தொழில் துறை மற்றும் தொழில் துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் புடின் நடத்திய ஆலோசனைக்கு பிறகு வெளிநாட்டு கார்களை பயன்படுத்த தடை விதிக்கும் அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.

ரஷ்ய பிராண்டுகள், ரஷ்ய கார்கள் மற்றும் பிற ரஷ்ய பொருட்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.. இந்த நடவடிக்கை உள்நாட்டு கார் தயாரிப்புகளை ஊக்குவிக்க உதவும் என்றும் புடின் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், நாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளும் ரஷ்ய தயாரிப்பு கார்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் அது குறைவான ஆடம்பரமாக இருக்கலாம். ஆனால் அதில் பெரும் பிரச்சனைகள் இருக்காது. அது நாட்டிற்கு நல்லது தான் என்றார்.

 

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்