இலங்கை

“ஏஹி பஸ்ஸிகோ” சர்வதேச அமைதி நடைபயணம் இன்று நிறைவு

உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டு செல்லும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “ஏஹி பஸ்ஸிகோ” சர்வதேச அமைதிப் நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும்.

இன்று நண்பகல் 12 மணியளவில் களனி ரஜமகா விகாரையில் இருந்து ஆரம்பமாகும் இந்த அமைதி நடைபயணம், சுதந்திர சதுக்கத்தை நோக்கிப் பயணிக்கவுள்ளது.

மாலை 4 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் விசேட அரச நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் இருந்து மீண்டும் ஆரம்பமாகும் நடைபயணம், கொழும்பு கங்காராம விகாரையை சென்றடைந்ததும் நிறைவு பெறவுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி தம்புள்ளையில் இருந்து ஆரம்பமான இந்த “ஏஹி பஸ்ஸிகோ” சர்வதேச அமைதி நடைபயணம், நேற்றைய தினம் யக்கலையில் இருந்து களனி ரஜமகா விகாரையை வந்தடைந்திருந்தது.

இந்த நடைபயணம் காரணமாக இன்று கொழும்பின் சில வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!