ஐரோப்பா

France 3 தொலைக்காட்சிற்கு வெடிகுண்டு மிரட்டல் : மூடப்பட்டது சேவைகள்

இன்று காலை ஏழு மணிக்கு “அல்லாஹ்வின் மகிமைக்காக இந்த செயலைச் செய்யப் போகிறேன் ” என்னும் தலைப்பிட்டு மின்னஞ்சல் ஒன்று France 3 தொலைக்காட்சி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர், பணியாளர்கள், கட்டிடத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும்  “அல்லாஹ்வின் மகிமைக்காக இந்த செயலைச் செய்யப் போகிறேன் ” என்றும் அந்த மின்னஞ்சலில் எழுதப்பட்டுள்ளது.

குறித்த மின்னஞ்சலை அடுத்து France 3 சேவையின் Reims நகரில் உள்ள Hampagne-Ardenne தளம் முழுவதுமாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அதேபோல் தூர இடங்களில் இருந்து பணிக்கு வருபவர்கள் அவர்களது வீடுகளிலேயே தங்கி இருக்குமாறு மின்னஞ்சல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் France 3 சேவையின் 12/13 சேவைகள் (பன்னிரண்டு மணியளவில் இருந்து ஒருமணி வரை) நிறுத்தப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்