அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணங்களை அதிகரிக்க முன்மொழிவு
அமெரிக்காவில் ‘விருப்பத் தேர்வு நடைமுறைப் பயிற்சி’ (Optional Practical Training – OPT) திட்டத்தின் கீழ் பணியாற்ற விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு 70,000 டொலர் கட்டணத்தை விதிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (Department of Homeland Security) முன்மொழிந்துள்ளது.
இந்த முன்மொழிவின்படி, ஒரு மாணவரின் ஆரம்பக்கட்டத் திட்ட விண்ணப்பத்திற்கு 70,000 டொலரும், ஒவ்வொரு முறை அதைப் புதுப்பிப்பதற்கும் 30,000 டொலரை கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் செலுத்த வேண்டியிருக்கும்.
மோசடிகளை தடுப்பதற்காகவே கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.
இந்த விதிமுறை அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, பணியாளர் திறன் மேம்பாடு மற்றும் சர்வதேச மாணவர் சேர்க்கை ஆகியவற்றைப் பாதிக்கும் என்று கல்வித் துறைத் தலைவர்களும் வணிகக் குழுக்களும் எச்சரித்துள்ளனர்.
இந்த முன்மொழிவு குறித்து 60 நாட்களுக்குப் பொதுமக்களின் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. இது இறுதி செய்யப்படுவதற்கு முன்னதாகச் சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ளக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.




