செய்தி விளையாட்டு

2026 ஃபிஃபா(FIFA) உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை அறிவிப்பு

Prize money for 2026 FIFA World Cup winners announced

FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி 2026ம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19ம் திகதி வரை கனடா(Canada), மெக்சிகோ(Mexico) மற்றும் அமெரிக்கா(America) ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், அடுத்த ஆண்டு உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு $50 மில்லியன் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று உலக கால்பந்து நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை $727 மில்லியன் எனவும் உலகக் கோப்பை முழுவதும் பங்கேற்கும் 48 அணிகளுக்கும் பணம் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

பரிசுத் தொகை விவரங்கள்:

வெற்றியாளர்: $50 மில்லியன்
இரண்டாம் இடம்: $33 மில்லியன்
மூன்றாம் இடம்: $29 மில்லியன்
நான்காம் இடம்: $27 மில்லியன்
5-8 இடங்கள்: $19 மில்லியன்
9-16 இடங்கள்: $15 மில்லியன்
17-32 இடங்கள்: $11 மில்லியன்
33-48 இடங்கள்: $9 மில்லியன்

இதற்கு முன்னதாக வெற்றியாளர்களுக்கான இந்த பரிசுத்தொகை 2022ல் $42 மில்லியன் மற்றும் 2018ல் $38 மில்லியன் ஆக அமைந்திருந்தது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி