ஐரோப்பா

ரஷ்யா – உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்றம்!

அபுதாபியில் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் முன்னெக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளின் விளைவாக  உக்ரைனும் ரஷ்யாவும் 314 கைதிகளைப் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாக அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்  (Steve Witkoff) தெரிவித்துள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தை அபுதாபியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் உதவியாளர் கைரிலோ புடனோவ் (yrylo Budanov) உட்பட உக்ரைனிய அதிகாரிகள், பேச்சுவார்த்தைகளை ‘உண்மையிலேயே ஆக்கபூர்வமானவை’ என்று விவரித்துள்ளனர்.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கைதிகள் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தியது, இரு தரப்பிலும் 157 போர்க் கைதிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகவும், மூன்று பொதுமக்களும் ரஷ்யாவுக்குத் திரும்பியதாகவும் தெரிவித்தது.

இதேவேளை டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner), நாடுகளை ஒரு தீர்வை நோக்கி வழிநடத்தும் நோக்கில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்