கொலம்பியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு
கொலம்பியா மற்றும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
கொலம்பிய புவியியல் சேவை இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவை 6.6 என மதிப்பிட்டுள்ளது, அதேசமயம் அதன் அமெரிக்க இணை நிறுவனமான USGS, இது 7.4 என மதிப்பிட்டுள்ளது. இதன் மையப்புள்ளி கொலம்பியாவின் மேற்கில் பூமிக்கு அடியில் 100 கி.மீ. ஆழத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஈக்வடாரிலும், வடக்கே பனாமா வரையிலும் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்மானது குறிப்பிடத்தக்க காயங்களையும், சேதங்களையும் ஏற்படுத்தியதுடன், பொகோட்டாவில் கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேறவும் வழிவகுத்தது.





