பிரித்தானியாவில் அரசியல் சீர்குலைவு – ஜே.டி வான்ஸ் கடும் விமர்சனம்!
பிரித்தானியா அதன் தலைமைகளால் கைவிட்டப்பட்டுள்ளது என்றும், ஒரு தசாப்தத்தில் 07 பிரதமர்கள் மாறியதே இதற்கு சான்று என்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் விமர்சித்துள்ளார்.
சர் கெய்ர் ஸ்டார்மரின் ராஜினாமா மற்றும் ஆண்டி பர்ன்ஹாம் அடுத்த தொழிலாளர் கட்சித் தலைவராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் புதிய பிரதமர் “பிரித்தானியாவை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டு வருவார்” என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஆண்டி பர்ன்ஹாம் பற்றி தனக்குக் குறைந்த அளவே தெரியும் என்பதை ஒப்புக்கொண்ட போதிலும், அமெரிக்காவின் “மிக நெருக்கமான மற்றும் மிக முக்கியமான கூட்டாளிகளில்” ஒன்றாக பிரித்தானியாவின் நிலையை வேன்ஸ் உறுதிப்படுத்தினார்.
மேலும், புதிய தலைவருடன் வெற்றிகரமான ஒத்துழைப்புக்கு அவர் உறுதியளித்தார்.




