Site icon Tamil News

போலந்து விவசாயிகள் வார்சாவில் பேரணி!

இன்று செவ்வாயன்று ஆயிரக்கணக்கான போலந்து விவசாயிகள் வார்சாவில் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

போலந்து விவசாயிகள் மத்திய வார்சாவில் பேரணியாகச் சென்று பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்,

பின்னர் சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள பிரதம மந்திரி அலுவலகத்தை நோக்கிச் சென்றனர்.

காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘பசுமை ஒப்பந்தம்’ விதிமுறைகளால் தங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஐரோப்பா முழுவதும் விவசாயிகள் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Exit mobile version