இலங்கை

ஆற்றங்கரைக்கு அருகில் கரையொதுங்கிய மனிதத் தலை – பொலிஸார் தீவிர விசாரணை

  • August 30, 2026
  • 0 Comments

இலங்கை – மொரட்டுமுல்லாவில்  தச்சுப் பட்டறைக்குப் பின்னால்  உள்ள ஆற்றங்கரைக்கு அருகில்  துண்டிக்கப்பட்ட மனிதத் தலையொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. தச்சுப் பட்டறையின் உரிமையாளர் குறித்த தலையை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) தலையை கைப்பற்றியதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மொரட்டுவ பதிலாள் நீதிபதியும் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். குறித்த தலையானது மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததாகவும், விலங்குகளால் பகுதியளவு உண்ணப்பட்டிருக்கலாம் எனவும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பொலிஸ் அவசர சேவைக்கு வரும் தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்த உதவும் AI

  • August 18, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பொலிஸ் அவசர சேவைக்கு வரும் தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்த அல்லது துண்டிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. ஆண்டுதோறும் பெறப்படும் 20 மில்லியன் அழைப்புகளில் சுமார் 20 சதவீதம், உள்ளாட்சி மன்றங்கள் போன்ற காவல்துறை அல்லாத அமைப்புகளுக்கு உரியவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு, அழைப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து, அழைப்பாளர் வரிசையில் நுழைவதற்கு முன்பே, காவல்துறை அல்லாத விசாரணைகளைத் தானாகவே திசை திருப்பிவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் […]

இலங்கை

சாரதிகளுக்கு எச்சரிக்கை!

  • April 9, 2026
  • 0 Comments

மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டத்தை மிகக் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்துப் பாவனை மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் W.P.G.சேனாதீர தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள காவல்துறை தலைமையகத்தில் நேற்று (8) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், பண்டிகைக் காலத்தில் ஒரு சிறிய வாகன விபத்து இடம்பெற்றாலும் கூட, அதில் சம்பந்தப்பட்ட சாரதிகள் உடனடியாகப் போதைப்பொருள் பரிசோதனைக்கு […]

இலங்கை

தேவாலயங்களுக்குப் பலத்த பாதுகாப்பு!

  • April 5, 2026
  • 0 Comments

இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவர்களால் உயிர்த்த ஞாயிறு கொண்டாடப்படும் நிலையில், பாதுகாப்புப் படையினரின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் உள்ள முக்கிய தேவாலயங்களில் ஆயுதம் ஏந்திய பொலிஸாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை

கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

  • March 30, 2026
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பகுதியில் இன்று (30) பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுடன் அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இந்தச் சம்பவத்தின் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார். இதேவேளை, காரில் இருந்த இருவர் 500 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

ஜா-எலயில் துப்பாக்கிச் சூடு

  • March 7, 2026
  • 0 Comments

ஜா-எல, புனித ஆனா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (07) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடானது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான ‘பட்டுவத்தே சாமர’ என்பவருடைய மனைவியின் இல்லம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த சந்தேக நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர […]

இலங்கை

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

  • February 21, 2026
  • 0 Comments

மாத்தறை, கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசியல் இலங்கை செய்தி

சிறிதரன் எம்.பியை கைது செய்யவேண்டாமென அரச உயர்மட்டத்திலிருந்து உத்தரவு?

  • December 23, 2025
  • 0 Comments

“யாழ் தையிட்டியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் (sivagnanam shritharan) கைது செய்யப்படதாது ஏன்?” அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது இது தொடர்பில் இன்று (23) கேள்வி எழுப்பட்டது. குறித்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் (Department Of Government Information) நடைபெற்றது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்பான அறிவிப்பை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) வெளியிட்ட பின்னர், கேள்வி நேரம் ஆரம்பமானது. இதன்போது தையிட்டியில் நடந்த போராட்டம் தொடர்பிலும் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னியில் ஏழு பேர் கைது! போண்டி தாக்குதலுடன் தொடர்பா?

  • December 19, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா சிட்னி தென்மேற்கில் நேற்று நடந்த பொலிஸ் தேடுதல் வேட்டையின்போது எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரிடம் ஆஸ்திரேலிய புலனாய்வு பிரிவினரும் விசாரணை நடத்தியுள்ளனர் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். சிட்னி, போண்டி பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டன. அந்தவகையில் சிட்னி, லிவர்பூல் பகுதியில் நேற்று திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது குழுவொன்றை சேர்ந்த எழுவர் நியூ […]

இலங்கை

ஹெரோயினுடன் சிக்கிய அதிபரிடம் பலகோணங்களில் விசாரணை! 

  • November 6, 2025
  • 0 Comments

ஹெரொயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட அரச பாடசாலையொன்றின் அதிபருக்கு, டுபாயில் இருந்தே குறித்த போதைப்பொருள் அனுப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. எப்பாவல பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றார் என பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைய குறித்த அதிபருக்கு சொந்தமான எப்பாவல பகுதியிலுள்ள ஹோட்டலொன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரான அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரின் மனைவி, தேசிய […]