தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்ய AI ஐ காரணமாக பயன்படுத்த முடியாது – சீன நீதிமன்றம் அதிரடி!
தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதற்கு செயற்கை நுண்ணறிவை (AI) ஒரு காரணமாக முதலாளிகள் பயன்படுத்த முடியாது என்று சீன நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹாங்சோ இடைநிலை மக்கள் நீதிமன்றம், இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இது தொழிலாளர் உரிமைகளுக்கு கிடைத்த ஒரு பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு வெளியீட்டைக் கண்காணிக்க பணியமர்த்தப்பட்ட ஜோ என்ற ஊழியர் ஊதிய உயர்வை கோரிய நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அவருக்கு ஆதரவாகவே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
“நிறுவனம் குறிப்பிட்ட பணிநீக்கக் காரணங்கள், நிறுவனத்தின் அளவு குறைதல் அல்லது செயல்பாட்டுச் சிக்கல்கள் போன்ற எதிர்மறையான சூழ்நிலைகளின் கீழ் வரவில்லை என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம் ‘வேலை ஒப்பந்தத்தைத் தொடர இயலாது’ என்ற சட்டப்பூர்வ நிபந்தனையையும் பூர்த்தி செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளத.





