ஒருநாள் தொடர் – இங்கிலாந்து அணிக்கு 220 ஓட்டங்கள் இலக்கு
ODI series – England set target of 220 runs
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
கொழும்பு ஆர். பிரேமதாச(R. Premadasa) மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பமானது.
நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அந்தவகையில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில், தனஞ்சய டீ சில்வா(Dhananjaya de Silva) ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களும் சரித் அசலங்க(Charith Asalanka) 46 ஓட்டங்களும் பெற்றனர்.





