உலகம்

அமெரிக்கா – ஈரானுக்கு இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று!

அமெரிக்காவும் ஈரானும் இன்று ஓமானில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்து, அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இடம்பெறவுள்ள இந்த பேச்சுவார்த்தைகள் சர்வதேச  அளவில் கவனம் பெற்றுள்ளன.

இதன்போது  பாலிஸ்டிக் ஏவுகணைகள், பிராந்திய பினாமி நெட்வொர்க்குகள் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் போன்ற பிற விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் தனது அணுசக்தி திட்டம் அமைதியானது என்று பல தசாப்தங்களாக கூறிவருகிறது. இருப்பினும் மேற்குலக நாடுகள் இது தொடர்பான கவலைகளை தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதலை முன்னெடுத்தது. அப்போதிருந்தே அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்