NHS மகப்பேறு பிரிவுக்கு புதிய ஆணையரை நியமிக்க திட்டம்
NHS மகப்பேறு பராமரிப்பில் ஏற்படும் தோல்விகளை கருத்தில் கொண்டு ஒரு தேசிய மகப்பேறு ஆணையரை நியமிக்கும் திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.
பரோனஸ் வலேரி ஆமோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் NHS மகப்பேறு பராமரிப்பில் மீண்டும் மீண்டும் ஏற்படும் தோல்விகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக பெண்களின் குரல் கேட்கப்படாமல் இருப்பது, ஆழமாக வேரூன்றிய இனவாதம் மற்றும் பாகுபாடு, துண்டு துண்டான சேவைகள், மற்றும் தவிர்க்கக்கூடிய தீங்குகளுக்கு வழிவகுக்கும் மருத்துவப் பெண் வெறுப்புக் கலாச்சாரம் உள்ளிட்ட சிக்கல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குடும்பங்களுக்கு சுதந்திரமான விசாரணைகளுக்கான உரிமையை உறுதி செய்தல், மருத்துவமனை கலாச்சாரம் மற்றும் குழுப்பணியை மேம்படுத்துதல், மற்றும் மகப்பேறு பிரிவுகளில் 07 நாட்களும் 24 மணிநேரமும் மூத்த மருத்துவர் இருப்பதை உறுதி செய்தல் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மருத்துவ பராமரிப்பில் இருக்கும் தோல்விகள், மற்றும் பரிந்துரைகளை பரிசீலித்துள்ள அரசாங்கம் தேசிய ஆணையர் பதவிக்கு ஒப்புக் கொண்டுள்ளது.
மகப்பேறு குறித்த தேசிய செயல் திட்டத்தை வெளியிட உறுதியளித்துள்ளதுடன், மேலும் 1,000 தற்காலிக மருத்துவச்சி பணியிடங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.





