பொழுதுபோக்கு

நயன்தாரா 75ஆவது படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

நயன்தாராவின் 75ஆவது படமான அன்னபூரணி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது.

கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது.

அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார்.

தொடர்ந்து சில பிரச்னைகளை சந்தித்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார் . அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார்.

இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

நயன்தாரா இப்போது தமிழில் தனது 75ஆவது படத்திலும், ஜெயம் ரவியுடன் இறைவன் படத்திலும், மண்ணாங்கட்டி படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இவற்றில் இறைவன் படம் சமீபத்தில் வெளியானது.

திருமணமாகி குழந்தைகள் பெற்றாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் தீராத ஆர்வத்துடன் இருக்கிறார். அவருக்கு விக்னேஷ் சிவனும் முழுக்க முழுக்க சப்போர்ட்டாக இருக்கிறார்.

நடிகைகளுக்கு திருமணமானாலே சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவார்கள் என்ற விதி காலங்காலமாக தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் உடைத்து திருமணத்துக்கு பிறகும் நடிக்கலாம் என தற்கால நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார் நயன்தாரா.

ஹிந்தியில் அவர் நடித்த ஜவான் படம் மெகா ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி பக்கம் நயன் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே தமிழில் அவர் மண்ணாங்கட்டி என்ற படத்திலும் தன்னுடைய 75ஆவது படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.

இச்சூழலில் நயன்தாரா நடிக்கும் 75ஆவது படத்தின் பெயர் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி படத்துக்கு அன்னபூரணி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த க்ளிம்ப்ஸ் காட்சிகள் ஒருதரப்பினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில் அன்னபூரணி படமானது டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸாகவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் நயன் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content