வட அமெரிக்கா

மொரோக்கோ வானில் தோன்றிய மர்ம ஒளி – வைரலாகும் வீடியோ

மொரோக்கோவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்குமுன் வானத்தில் மர்மமான ஒளி தென்பட்டதாக சமூக ஊடகத் தளங்களில் வீடியோ ஒன்று விரிவாகப் பகிரப்படுகிறது.

வானத்தில் திடீரென்று நீல வெளிச்சம் தோன்றுகிறது. சில நொடிகளில் அது மறைந்த நிலையில் மீண்டும் ஒளி தோன்றுகிறது.

நில நடுக்கம் ஏற்படும் இடங்களில் வானத்தில் அத்தகைய ஒளி தென்படுவது வழக்கம். பல நூற்றாண்டுகளுக்கு முன்புகூட அப்படி ஒளி காணப்பட்டது.

18, 19, 20 ஆகிய நூற்றாண்டுகளில் கிட்டத்தட்ட 65 நிலநடுக்கச் சம்பவங்களில் ஒளி தென்பட்டதாகப் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.

சில சமயம் ஒளி மின்னல் வேகத்தில் மறைந்துவிடும்.சில சமயம் அது பல நிமிடங்கள் மிளிரும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒளி பல்வேறு வண்ணங்களிலும் தோன்றுவது உண்டு. அது ஏன் ஏற்படுகிறது என்பது மர்மமாகவே உள்ளது.

வானத்து ஒளிக்கும் நிலநடுக்கத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை என கூறப்படுகின்றது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்