விளையாட்டு

சமூக வலைதளத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பாலோயர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது.

ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இன்ஸ்டாகிராமில் சுமார் 1.5 லட்சம் பாலோயர்ஸ்களை மும்பை அணி இழந்துள்ளது.

மும்பை அணியிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என குமுறும் இணைய வாசிகள், ரோகித் சர்மாவுக்காக மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவளித்து வருவதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹாஷ்டேகுகள் வைரலாகி வருகிறது.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ