இலங்கை

மட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேரூந்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டி இனம் தெரியாத நபர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதியில் கல்முனை மட்டக்களப்பு வீதியில் ஆரையம்பதி பிரதான வீதியில் குறித்த பஸ் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு -பொத்துவில் பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ் வண்டி நேற்று புதன்கிழமை மாலை 7 மணி அளவில் நிறுத்தி வைக்கப்பட்டு உரிமையாளர் தனது சொந்த இடமான கொக்கட்டிச்சோலைக்குச் சென்று விட்டார்.இன்று அதிகாலை 3:30 மணியளவில் குறித்த பஸ் வண்டி தீப்பற்றி எரிவதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிசாருக்குவழங்கிய தகவலையடுத்து காத்தான்குடி பொலிசார் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டபோது பஸ் வண்டி முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு படையினர் குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் பஸ் வண்டி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்