இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர் இலங்கையிலும் எதிரொலிப்பு: எகிறியது எரிபொருள் விலை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO), நவம்பர் 1 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் வகைகளின் விலைகளை அதிகரித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO), நவம்பர் 1 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் வகைகளின் விலைகளை அதிகரித்துள்ளது.

இதற்கமைய, ஒரு லீற்றர் லங்கா ஒட்டோ டீசலின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 397 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 வகையின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 543 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் வகையின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாவாகவும், லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 வகையின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 490 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன் ஒரு லீற்றர் விலை 285 ரூபாவாகத் தொடர்ந்தும் காணப்படும்.

மத்திய கிழக்கு போர் சூழ்நிலையால் உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. அதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலித்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை