ஸ்பெயின் ரயில் விபத்து – 12 வெளிநாட்டினர் மரணம்
ஸ்பெயினில் இடம்பெற்ற கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 10 வெளிநாட்டினர் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடயவியல் நிபுணர்களின் இறந்தவர்களின் உடல்களை ஆய்வு செய்து அடையாளங்களை உறுதிப்படுத்தினர்.
இதற்கமைய உயிரிழந்தவர்களில் அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் கனடா, ஜப்பான், அர்ஜென்டினா, மெக்சிகோ, துனிசியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் போர்த்துகீசை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவித்திருந்த நிலையில் தற்போதைய அறிவிப்பு வந்துள்ளது.
ஆக மொத்தத்தில் இந்த விபத்தில் 12 வெளிநாட்டினர், 54 ஸ்பானியர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல்போயுள்ளனர்.
அவர்களை தேடும் பணி தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




