இலங்கை

கட்சி தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால ராஜினாமா ?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நீதிமன்றத்தின் தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகுவார் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் தலைவர், கட்சியின் போஷகர் பதவிக்கு நியமிக்கப்படுவார்.

தற்போதும் கட்சியில் கடும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், இரு பிரிவினரும் இரண்டு பதில் தலைவர்களின் பெயர்களைக் கூறி தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கையளித்துள்ளனர்.

இந்த நியமனங்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த பலரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்