இலங்கை

அநுரவின் ஆட்சியை வீழ்த்த சூனியம் செய்யும் பூஜையில் இறங்கிய தேரர்கள்

தற்போதைய ஆட்சியை மூன்று மாதங்களுக்கு பலவீனப்படுத்துமாறு வலியுறுத்தி தேரர்கள் விசேட பூஜைகளை முன்னெடுத்துள்ளனர்.

விஹாரமகாதேவி பூங்காவில் தேரர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தில் ஒரு கட்டமாக நேற்றைய (20) தினம  வஜிரபாணி, உத்பலவண்ண, பஜ்ஜுன்ன மற்றும் மகா வெசமுணி ஆகிய யக்ஷராஜ தேவர்களை விளித்து, புத்த சாசனத்தை அழிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஆட்சியாளர்களைத் தண்டிக்குமாறும், அவர்களின் ஆட்சிப் பலத்தை உடைக்குமாறும், மூன்று மாதங்களுக்குள் தற்போதைய ஆட்சியைப் பலவீனப்படுத்தி நாட்டில் அறநெறிசார் ஆட்சியை ஏற்படுத்துமாறும் வலியுறுத்தி   சூனியம் செய்யும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

புத்த சாசனத்தையும் காவி உடையையும் பாதுகாக்க யக்ஷப் படைகளை அனுப்புமாறும், ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இலங்கையில் புத்த சாசனம் நிலைத்திருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்துமாறும் தேவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் வகையில் இந்த பூஜைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்