ஐரோப்பா

உக்ரைனை கைவிடுகிறதா அமெரிக்கா? உதவியதற்கு பலனில்லை என்கிறார் ட்ரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவிற்குப் பதிலாக, தங்களுக்கு “எதுவும் கிடைக்கவில்லை” என்றும் அவர் குறை கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜெலென்ஸ்கி ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவரால் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க முடியும்” என்று கூறினார்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஓவல் அலுவலகத்தில் நாங்கள் உரையாடியபோதே அவர் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவிலான உதவிகளை வழங்கியுள்ளோம்; ஆனால் பதிலுக்கு எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதிக டீசல் விலையைத் தவிர வேறொன்றும் இல்லை,” என்றும் ட்ரம்ப் சாடியுள்ளார்.

ட்ரம்பிற்கும் – ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான உறவு நிலையற்றதாகவே இருந்து வருகிறது. ஆனால், சமீபத்திய வாரங்களில் இந்த உறவு மேலும் மோசமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்