ஐரோப்பா

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் பதவி விலகல் கோரிக்கையை நிராகரித்தார் மக்ரோன்!

பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் பதவி விலகுவதற்கான கோரிக்கையை மக்ரோன் நிராகரித்துள்ளார்.  அதற்கு பதிலாக முட்டுக்கட்டையை உடைத்து சட்டத்தை நிறைவேற்ற புதிய வழிகளைக் கண்டறியுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரான்ஸில் தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் ஆட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், சர்சைக்குரிய குடியேற்ற மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் பிரதமர்  எலிசபெத் போர்ன் திங்கள்கிழமை மாலை பல அமைச்சர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் அடங்கிய அவசரக் கூட்டத்தை நடத்தினார்.

ஜனாதிபதியின் எலிசீ அரண்மனையில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உள்துறை அமைச்சரின் பதவி விலகல் முன்மொழிவை மக்ரோன் நிராகரித்துள்ளார். அத்துடன் சட்டத்தை இயற்றுவதற்கு தடையாக உள்ளவற்றை நிவர்த்தி செய்து, முன்னோக்கி செல்வதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்