தமிழ்நாடு

நாவலூரில் 8வது மாடியில் இருந்து விழுந்து 3 வயது குழந்தை பலி…!

சென்னையை அடுத்த நாவலூரில் 8-வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து எட்டிப்பார்த்த மூன்று வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நாவலூரில் OMR சாலை அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிகண்டன், ஜிஜி தம்பதி, 3 வயதான மகன் ஆரவ்வுடன் வசித்து வந்தனர். தம்பதி இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.

குழந்தை ஆரவ்வை அழைத்துக் கொண்டு கீழே வந்த தாய் ஜிஜி விளையாடியுள்ளார். பின்னர், மீண்டும் வீட்டிற்குத் திரும்பிய போது தாயும், குழந்தை ஆரவும் லிஃப்டில் சென்றுள்ளனர்.

அப்போது, தாய் ஜிஜி 5 மாடியிலேயே இறங்கிய நிலையில், ஆரவ் இறங்காமல் உள்ளேயே நின்றதால் 8-வது மாடிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அங்கு மாடியில் லிஃப்ட் திறந்தவுடன் தாயைக் காணவில்லை என்பதால், அருகில் இருந்த பால்கனி வழியாக குழந்தை ஆரவ் எட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக 3 வயது குழந்தையான ஆரவ் 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை தாய் ஜிஜி கதறியபடி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு குழந்தையைப பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

சிறுவனின் உடலை கைப்பற்றிய தாழம்பூர் காவல் நிலையத்தினர் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். 8-வது மாடியில் இருந்து விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்