வட அமெரிக்கா

அமெரிக்கத் தலைநகரத்தில் பரபரப்பு – அதிர வைத்த வெடிப்புச் சத்தம்

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் DCயை அதிர வைக்கும் வெடிப்புச் சத்தம் தொடர்பில் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் வியப்பில் ஆழ்த்தியிருந்தது.

அருகில் உள்ள வெர்ஜீனியா, மேரிலேண்ட் மாநிலங்கள்வரை சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அத்துமீறி ஆகாய வெளிக்குள் நுழைந்த விமானம் ஒன்றை அமெரிக்கப் போர் விமானங்கள் விரைந்து விரட்டியபோது ஒலி எழுந்ததாக மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்தது.

அந்தச் சிறிய விமானம் பிறகு வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

அது விழுந்து நொறுங்கியதற்குப் போர் விமானங்கள் காரணமல்ல என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்