செய்தி

இந்தியாவில் அரசியல் சமர்: ராகுல் காந்தியை சொற்போருக்கு அழைக்கிறது பாஜக

இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விடுத்த விவாதச் சவாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விடுத்த விவாதச் சவாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஹரியானாவின் கர்னாலில் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) சார்பில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய அமித் ஷா, ராகுல் காந்தி விவாதிக்க விரும்பினால் நாடாளுமன்றத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

“உங்களிடம் உண்மையான குற்றச்சாட்டுகளும், ஆதாரங்களும், தர்க்கரீதியான வாதங்களும் இருந்தால் நாடாளுமன்றத்துக்குள் வந்து விவாதியுங்கள். நேருக்கு நேர் மோதுவோம். ஆனால், அரசாங்கத்தின் பதில்களை எதிர்கொள்ள முடியாமல் வழமைபோன்று நீங்கள் விவாதத்திலிருந்து விலகிச் செல்வீர்கள்” என அமித் ஷா தெரிவித்தார்.

மேலும், தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையான (SIR) தொடர்பாக விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், இதற்காக நாடாளுமன்றத்தின் விசேட அமர்வொன்றைக் கூட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் மூலம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதைத் தவிர்த்து வீதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகள் மற்றும் கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் பா.ஜ.க. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அமித் ஷா கூறினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி