இந்தியா செய்தி

மின்சார சேமிப்பு கட்டாயம்: இந்தியாவில் புதிய அதிரடி உத்தரவு

இந்தியாவில் மின்சாரத்தைச் சேமித்து வைத்து, அதிக தேவை ஏற்படும் நேரங்களில் பயன்படுத்தும் வகையில், மாநில மின்சார விநியோக நிறுவனங்களுக்கு மின்சார சேமிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

இந்தியாவில் மின்சாரத்தைச் சேமித்து வைத்து, அதிக தேவை ஏற்படும் நேரங்களில் பயன்படுத்தும் வகையில், மாநில மின்சார விநியோக நிறுவனங்களுக்கு மின்சார சேமிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

இந்திய மின்சக்தித் துறையின் செயலாளர் பங்கஜ் அகர்வால் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாட்டில் உரையாற்றிய அவர், மின்சாரத்தை வாங்கும் உரிமம் பெற்ற அனைத்து நிறுவனங்களும், குறிப்பாக மாநில மின்சார விநியோக நிறுவனங்களும், மின்சார சேமிப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான புதிய விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார்.

தற்போது அதிகளவில் மின்சாரத் தேவை ஏற்படும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்காக, பகல் வேளையில் உற்பத்தியாகும் உபரி புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைச் சேமித்து வைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மின்சாரத்தை வாங்கும் மாநில நிறுவனங்கள், உபரியான மின்சாரத்தைச் சேமிப்பதற்கான மின்கலக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்காததால், இந்த ஆண்டு இந்தியாவின் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ஒவ்வொரு நிறுவனமும் எவ்வளவு மின்சாரச் சேமிப்புத் திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தொடர்பான விபரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என பங்கஜ் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் 300 ஜிகாவாட்டுக்கும் அதிகமான புதைபடிவமற்ற மின்சார உற்பத்தித் திறன் இருந்தபோதிலும், மின்சாரத்தைச் சேமித்து வைக்க முடியாத காரணத்தினால், மாலை மற்றும் இரவு நேரத் தேவையைப் பூர்த்தி செய்ய நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, எல் நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக மழைவீழ்ச்சி குறைந்துள்ளதால், நீர்மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மின்சாரச் சேமிப்புத் திட்டங்களை மேம்படுத்துவதற்காக 145 பில்லியன் இந்திய ரூபா (சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்) நிதி ஒதுக்கீட்டிலான திட்டமொன்றுக்கு இந்திய அரசாங்கம் புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், 2027 ஜூலை முதல் அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அனைத்து புதிய சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத் திட்டங்களிலும் மின்கலச் சேமிப்பு வசதிகளை கட்டாயமாக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி