பொழுதுபோக்கு

லியோ பட விஷயத்தில் வெறுத்துப் போன லோகேஷ்!! அடம்பிடிக்கும் விஜய்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்ட தருவாயில் இருக்கிறது.

இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை அதிக எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகிறது. எப்பொழுது திரையரங்குகளில் வெளிவரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படம் ரிலீசுக்கு முன்பே நல்ல பிசினஸ் ஆகியுள்ளது. போதாக்குறைக்கு இன்னும் இப்படத்தின் மூலம் பெத்த லாபத்தை பார்க்கலாம் என்று படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து விஜய் இடம் பல கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

ஆனால் விஜய் அதை எதையுமே காது கொடுத்து கேட்காமல், லோகேஷ் என்ன சொன்னாலும் நோ நோ என்று சொல்லி வருகிறார். ஏற்கனவே இந்த படம் வெளிநாட்டு உரிமையில் கிட்டத்தட்ட 60 முதல் 70 கோடி வரை லாபத்தை பார்த்துள்ளது.

இதை இன்னும் அதிகரிக்க படத்திற்கு ஒரு பிரமோஷன் கொடுத்தால் அதிக இலாபம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

ஆனால் அதையெல்லாம் வேண்டாம் என்று விஜய் மறுத்துவிட்டார். ஏற்கனவே படப்பிடிப்பின் போது விஜய்க்கும் லோகேஸ்க்கும் சின்ன சின்ன வாய் தகராறுகள் ஏற்பட்டிருக்கிறது. அதை மனதில் வைத்து தான் என்னமோ லோகேஷ் என்ன சொன்னாலும் வேண்டாம் என்று சொல்கிறாரோ என்னவோ.

கடைசியாக நேரு ஸ்டேடியத்தில் ஆடியோ லான்ச் வைக்கலாம் என்று லோகேஷ் சொல்லி இருக்கிறார்.

ஆனால் அதற்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டார். அதற்கு பதிலாக கோயம்புத்தூர் மற்றும் திருச்சி போன்ற இடத்தில் வையுங்கள் என்று கண்டிஷன் ஆக கூறி இருக்கிறார். இதனால் லோகேஷ் ரொம்பவே வெறுத்துப் போய் இருக்கிறார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்