துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியாவின் ராணுவத் தலைவர் மரணம்
Libyan military chief dies in plane crash in Turkey
துருக்கியின்(Turkey) தலைநகரான அங்காராவிலிருந்து(Ankara) லிபியாவின்(Libya) இராணுவத் தலைவர் மற்றும் நான்கு பேரை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதையும் பிராந்திய பிரச்சினைகளைத் தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளுக்காக லிபிய இராணுவத் தலைவர் அங்காராவில் இருந்ததாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், லிபிய பிரதமர் அப்துல்-ஹமீத் திபீபா(Abdul-Hamid Tibiba), ஜெனரல் முகமது அலி அகமது அல்-ஹதாத்(Mohammed Ali Ahmed al-Haddad) மற்றும் பிறரின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.





