ரியாத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மிகப்பெரிய திருமண நிகழ்வு
Biggest wedding event to take place in Riyadh next week
டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் ரியாத்தில்(Riyadh) உள்ள என்சான்(Ensan) அறக்கட்டளையின் ஆதரவின் கீழ் மொத்தம் 282 ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
ரியாத் ஆளுநர் இளவரசர் பைசல் பின் அப்துல்அஜிஸ்(Faisal bin Abdulaziz) மற்றும் அவரது மனைவி இளவரசி நூரா பின்த் முகமது(Noura bint Mohammed) ஆகியோரின் தலைமையில் அடுத்த வாரம் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
பயனாளிகள் நிலையான குடும்பங்களை கட்டியெழுப்ப உதவும் தொண்டு நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது என்று அமைப்பின் இயக்குநர் ஜெனரல் முகமது பின் சாத் அல்-முஹாரிப்(Mohammed bin Saad Al-Muharib) குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு, இந்த அமைப்பு வீட்டு பொருளாதாரம் மற்றும் குழந்தை வளர்ப்பு உட்பட பல்வேறு பயிற்சி படிப்புகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.





