ராசிபலன்

சிங்கத்தை போல் இருக்கும் சிம்ம ராசி நேயர்கள்

மேஷம் -ராசி:
கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கவலைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

அஸ்வினி : நன்மைகள் ஏற்படும்.
பரணி : வாய்ப்புகள் சாதகமாகும்.
கிருத்திகை : ஆதரவான நாள்.

ரிஷபம் ராசி:
தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : புரிதல் உண்டாகும்.
மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மிதுனம் -ராசி:
பூர்வீக சொத்துக்களின் வழியில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். சிற்றின்ப செயல்பாடுகளால் சேமிப்புகள் குறையும். பிரபலமானவர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் படிப்படியாக குறையும். புதுமையான சிந்தனைகளின் மூலம் மனதளவில் மாற்றம் பிறக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

மிருகசீரிஷம் : சேமிப்புகள் குறையும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : மாற்றம் பிறக்கும்.

கடகம் -ராசி:
கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். வாகன பயணங்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நறுமண பொருட்கள் தொடர்பான துறைகளில் லாபம் மேம்படும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். உங்கள் மீதான அவப்பெயர்கள் படிப்படியாக குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை.

புனர்பூசம் : பயணங்கள் கைகூடும்.
பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஆயில்யம் : அவப்பெயர்கள் குறையும்.

சிம்மம் -ராசி:
திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். அஞ்சல் துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

மகம் : காரியங்கள் கைகூடும்.
பூரம் : குழப்பங்கள் குறையும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி -ராசி:
குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். தனவரவுகள் எதிர்பார்த்தபடி இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். கடந்த கால நினைவுகளின் மூலம் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அஸ்தம் : மாற்றமான நாள்.
சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம் -ராசி:

பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உங்கள் மீது விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். எண்ணிய பணிகள் ஈடேறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்வது நல்லது. வியாபார பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். உணர்வுகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான சிந்தனைகள் பிறக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.

சித்திரை : குழப்பங்கள் மறையும்.
சுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
விசாகம் : உயர்வான நாள்.

விருச்சிகம்- ராசி:
எதிர்பாராத செலவுகளின் மூலம் கையிருப்பு குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். போட்டிகள் தொடர்பான செயல்பாடுகளில் புதிய அனுபவம் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பே நிறைவேறும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

விசாகம் : விழிப்புணர்வு வேண்டும்.
அனுஷம் : வாய்ப்புகள் அமையும்.
கேட்டை : அலைச்சல் உண்டாகும்.

தனுசு -ராசி:
உடன்பிறந்தவர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளை திறமையுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் செய்து முடிப்பீர்கள். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.

மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : லாபம் உண்டாகும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம் -ராசி:
உறவினர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். ஆசிரியர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்தாலும், அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் உங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : சிந்தனைகள் மேம்படும்.
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.

கும்பம் -ராசி.
புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதில் இருக்கக்கூடிய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான சூழல் ஏற்படும். மனதில் இருக்கும் பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவு ஏற்படும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிறு தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையும். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

அவிட்டம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
சதயம் : தெளிவு ஏற்படும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.

மீனம் -ராசி:
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் இருக்கும் கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். பார்வை தொடர்பான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
ரேவதி : கவனம் வேண்டும்.

(Visited 5 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ராசிபலன்

இன்று உங்கள் ராசியின் அதிர்ஷ்டம்

மேஷம் -ராசி: முக்கியமான முடிவினை எடுக்கும் பொழுது ஆலோசனைகளை பெறவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில்
ராசிபலன்

கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம்

மேஷம் -ராசி: கலை சார்ந்த பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பதற்றமான சூழ்நிலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும்

You cannot copy content of this page

Skip to content