இந்தியா செய்தி

ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் – இந்தியர்களுக்கு அவசர அறிவிப்பு

இந்தியர்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அவசர அறிவிப்பை விடுத்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எந்தவொரு வழிகளையும் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து இந்தியர்களும் வணிக விமானங்கள் அல்லது பிற போக்குவரத்து வழிகளை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து இந்திய குடிமக்களும், இந்திய தகவல் தொடர்பு அதிகாரிகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளை தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் ஐந்து மற்றும் பெப்ரவரி மாதம் 14 ஆகிய திகதிகளில் இதேபோன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி