ஐரோப்பா

மன்னரின் சொத்து வரி விபரம் வெளியானது

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் சொத்து வரி விபரம் வெளியாகியுள்ளது.

இதற்கமைய 2024-2025 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அவர் 12.9 மில்லியன் டொலர் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி பிரித்தானியாவில் வரி செலுத்தும் முதல் 100 பேரின் பட்டியலில் மன்னரும் இடம்பெற்றுள்ளார்.

அதே காலகட்டத்தில் வேல்ஸ் இளவரசர் £7.76 மில்லியன் வரி செலுத்தியதாக, வருடாந்திர அரச அறிக்கை மற்றும் கணக்குகளில் உள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மேலும், மன்னரும் ராணி கமிலாவும் கிளாரன்ஸ் ஹவுஸிலேயே தொடர்ந்து வசிப்பார்கள் என்றும், பக்கிங்ஹாம் அரண்மனைக்குக் குடிபெயர மாட்டார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

2023-24 ஆம் ஆண்டிற்கான வரியாக மன்னர் £11.7 மில்லியனையும், அதே காலகட்டத்திற்கு இளவரசர் வில்லியம் £8.34 மில்லியனையும் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னரும் இளவரசர் வில்லியமும் தாங்களாகவே எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்பதை வெளியிடுவது, இருவராலும் எடுக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட முடிவு என்று அவர்களது அலுவலகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கை வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதாகவும், “எங்கள் பொறுப்புக்கூறல் குறித்த பரந்த புரிதலை ஊக்குவிப்பதை” நோக்கமாகக் கொண்டதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை விவரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்