செய்தி

ஈரான் வசம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்பதில் மன்னர் உறுதி: ட்ரம்ப் தகவல்!

ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்ற விடயத்தில் மன்னர் King Charles III தன்னுடன் உடன்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரிட்டன் மன்னருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்பால் மன்னருக்கு விசேட விருந்தளிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ட்ரம்பின் மேற்படி கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம் அளித்துள்ளது.

அதில், அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதில் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுள்ள நீண்டகால நிலைப்பாட்டை மன்னர் நன்கு அறிவார் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி