பொழுதுபோக்கு

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய்யுடன் பத்ரி, பிரியமானவளே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த கசான் கான் மாரடைப்புக் காரணமாக மரணமடைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமானவர்.

கசான் கான் மரணம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘செந்தமிழ் பாட்டு’ என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகர் கசான் கான்.

Shocking Vijay movie Actor Kazan Khan passed away due to a heart attack

இதைத்தொடர்ந்து, கலைஞன், வேடன், சேதுபதி ஐபிஎஸ், என் ஆசை மச்சான், சிந்து நதி, டூயட், வல்லரசு, உள்ளிட்டா பல படங்களில் வில்லனாக நடித்தவர் இவர்.

தன்னுடைய தனித்துவமான நடிப்பாள் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம்பிடித்தவர்.

குறிப்பாக தளபதி விஜயுடன் பத்ரி மற்றும் பிரியமானவளே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பிரியமானவளே படத்தில் சிம்ரனுக்கு முறைமாவனாக நடித்திருந்த கசான் கான், 7 டைம்ஸ் 7 டைம்ஸ் என தன்னுடைய ஆம்ஸை உயர்த்தி காமெடி செய்த காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது.

Shocking Vijay movie Actor Kazan Khan passed away due to a heart attack

இவர் கடைசியாக தமிழில் ‘பட்டைய கிளப்பு’ என்கிற படத்தில் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து ஒரு சில மலையாள படங்களில் மட்டுமே நடித்தார்.

அந்த வகையில் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான லைலா ஓ லைலா என்கிற படத்தில் நடித்தார்.

இதைத் தொடர்ந்து பிசினஸில் ஆர்வம் காட்டிய கசான் கான், தன்னை தேடி வந்த பட வாய்ப்புகளையும் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

Shocking Vijay movie Actor Kazan Khan passed away due to a heart attack

திரையுலகில் இருந்து ஒரேயடியாக விலகிய இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள தகவல் தமிழ் மற்றும் மலையாள திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலை பிரபல மலையாள தயாரிப்பாளர், என்.எம்.பாதுஷா சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் இவருக்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

(Visited 13 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content