இலங்கை

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள்? நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக WhatsApp ஊடாக போலித் தகவல்கள் பகிரப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு தொழில் வாய்ப்பை வழங்குதல், வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிப்புகள் விடுக்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர். ஏ. எம். எல் ரத்நாயக்க கூறினார்.

போலி தகவல் தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸ் கணினி குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டு பரப்படும் லிங்குகளுக்குள் பிரவேசிக்கவோ, அவற்றை பகிரவோ வேண்டாமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்