ஆசியா

ஜப்பானில் தொடர்ச்சியாக 44 ஆவது ஆண்டாக பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவு!

ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வரும் நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 44 வது ஆண்டாக பிறப்பு விகிதம் வீழ்ச்சிடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜப்பானில் வெளிநாட்டினர் உட்பட 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 350,000 குறைந்து 13.66 மில்லியனாக உள்ளது என்று உள்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் மொத்த மக்கள் தொகையில் குழந்தைகள் வெறும் 11.1 சதவீதம் மட்டுமே, இது நாட்டின் மக்கள்தொகையில் புதிய சாதனை வீழ்ச்சியை அம்பலப்படுத்துகிறது.

ஜப்பானின் குழந்தைகள் மக்கள் தொகை 1982 முதல் தொடர்ந்து குறைந்து வருவதாக ஜப்பான் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

குறைந்தது 3.14 மில்லியன் குழந்தைகள் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள், அதே நேரத்தில் 2.2 மில்லியன் குழந்தைகள் மட்டுமே 0 முதல் 2 வயதுக்குட்பட்டவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  ஜப்பானில் 6.99 மில்லியன் சிறுவர்களும் 6.66 மில்லியன் சிறுமிகளும் உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, குறைந்தது 40 மில்லியன் மக்கள்தொகை கொண்ட 37 நாடுகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் விகிதத்தில் ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்