இந்தியா செய்தி

பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த இத்தாலி பிரதமர்

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இத்தாலி நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.” “நமக்காக காத்திருக்கும் உலகளாவிய சவால்களை ஒன்றாக எதிர்கொள்ளவும், இத்தாலி மற்றும் இந்தியா இடையிலான நட்புறவு, ஒத்துழைப்பு ஆகியவற்றை தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி