உலகம்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – நெதன்யாகுவிற்கு பின்னடைவு, ட்ரம்பின் ஆதரவால் பலனில்லை

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மறுதேர்தல் முயற்சிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  வழங்கிய வெளிப்படையான ஆதரவு எந்தவித ஊக்கத்தையும் அளிக்கவில்லை. மாறாக, அது அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று  கருத்து கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

அக்டோபர் 27 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கருத்து கணிப்புகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என அந்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் 120 இடங்களில் நெதன்யாகுவின் ‘லிகுட்’ (Likud) கட்சிக்கு 21 இடங்களும், அவரது முக்கிய போட்டியாளரான காடி ஐசென்கோட் (Gadi Eisenkot) தலைமையிலான ‘யாஷார்’ (Yashar) கட்சிக்கு 24 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரம்ப் நெதன்யாகுவை “வலிமையானவர், தைரியமானவர் மற்றும் புத்திசாலி” என்று புகழ்ந்து, இஸ்ரேலின் நீண்டகாலத் தலைவரான அவருக்குத் தனது “முழுமையான ஆதரவை” வழங்கியிருந்தார்.

இதற்குப் பின்னரே இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்