மத்திய கிழக்கு

காசாவிற்கான உதவிப்பொருட்களை எடுத்துச் சென்றவர்களை கைது செய்த இஸ்ரேலிய இராணுவம்

FILE PHOTO: Greta Thunberg and members of the crew react aboard a ship, part of the Global Sumud Flotilla aiming to reach Gaza and break Israel’s naval blockade, as they sail off Crete island, Greece, September 25, 2025. REUTERS/Stefanos Rapanis/File Photo

காசாவிற்கான உதவிப்பொருட்களை எடுத்துச்சென்ற சமூக ஆர்வலர் பலரை இஸ்ரேலிய இராணுவம் கைது செய்துள்ளது.

காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களிலிருந்து பல கப்பல்களை இஸ்ரேலிய இராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது.

பின்னர், அதிலிருந்த பல ஆர்வலர்களைக் கைது செய்துள்ளது.

44 கப்பல்கள் மற்றும் சுமார் 500 ஆர்வலர்களைக் கொண்ட குளோபல் சுமுத் புளோட்டிலாவிலிருந்து குறைந்தது மூன்று கப்பல்கள், காசா கடற்கரையிலிருந்து சுமார் 70 கடல் மைல்கள் (130 கி.மீ) தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதன்போது ஸ்வீடிஷ் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் “பல கப்பல்கள்” பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு, அவற்றின் பயணிகள் இஸ்ரேலிய துறைமுகத்திற்கு மாற்றப்படுகிறார்கள் என்று இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.