உலகம்

2024 ஆம் ஆண்டிற்கு பிறகு ரஃபா எல்லையை மீளவும் திறந்த இஸ்ரேல் – பலத்த சோதனைகளுடன் மக்கள் வெளியேற்றம்!

பாலஸ்தீன மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக காசாவின் ரஃபா (Rafah) எல்லைப் பகுதியை இஸ்ரேல் இன்று திறந்துள்ளது.

மே 2024 ஆம் ஆண்டிற்கு பிறகு எகிப்துடன் அமைந்துள்ள எல்லை பகுதி திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இஸ்ரேலிய இராணுவம் எல்லைப் பகுதியைக் கைப்பற்றிய பின்னர் அது பெரும்பாலும் மூடப்பட்டிருந்தது.

20000 பாலஸ்தீனியர்கள் மருத்துவ சிகிச்சைக்காக காத்திருக்கின்ற நிலையில், ஒரே நேரத்தில் 50 நோயாளிகள் இரண்டு உறவினர்களுடன் வெளியேற இஸ்ரேல் அனுமதித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் எல்லையைத் திறப்பது ஒரு முக்கிய அம்சமாக இடம்பெற்றிருந்தது.

இந்த பேச்சுவார்த்தைகளுக்கு அமைய தற்போது எல்லை திறக்கப்பட்டுள்ள நிலையில், இது பேச்சுவார்த்தையின் இரண்டாவது கட்டத்தை குறிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனியர்கள் கடந்து சென்றபோது, ​​பலத்த கண்காணிப்பு, குறுகிய பாதைகள், முள்வேலிகளால் வேலி அமைக்கப்பட்ட வாயில்கள் மற்றும் ஒரு சோதனைச் சாவடியில் விரிவான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுவதைக் காட்டும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்