லெபனானில் கோர தாண்டவம் ஆடும் இஸ்ரேல் – 13 பேர் பலி!
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் இரண்டு பெண்களும் ஒரு குழந்தையும் அடங்குவதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்தத் தாக்குதலில் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட போதிலும், ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடுமையான சண்டை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




