செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவுக்கு ஈரானின் நேரடி எச்சரிக்கை

flags of USA and Iran

ஈரானின் எரிபொருள் அல்லது எரிசக்தி வளங்கள் மீது ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படும் என அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஈரான் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கு தமது வான்பரப்பைப் பயன்படுத்தவோ அல்லது இராணுவத் தளங்களை வழங்கவோ அனுமதிக்கும் நாடுகள், ஈரானின் பதில் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் எனத் தூதரக ரீதியாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, 48 மணித்தியாலத்துக்குள் ஈரான் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்காவிட்டால், ஈரானின் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களைத் அமெரிக்கா தாக்கித் தகர்க்கும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்தே, ஈரான் அமெரிக்காவுக்கு குறித்த பதிலடி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Mahi

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி