மத்திய கிழக்கு

இஸ்ரேலின் இரு விமான தளங்கள் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்திய ஈரான்

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்தது. 2 வாரங்களாக அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்தது.

இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்கு கப்பலை ஈரான் படையினர் சிறை பிடித்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலின் 2 விமான தளங்களை ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளன என செய்தி தெரிவிக்கின்றது. இஸ்ரேல் நாட்டின் நெவாதிம் விமான தளத்தின் மீது 5 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் தாக்கியதில், சி-130 என்ற ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று, ஓடுபாதை மற்றும் கிடங்குகள் ஆகியவை தாக்கி அழிக்கப்பட்டன.

Iran launches retaliatory attack on Israel with hundreds of drones, missiles  | Reuters

இதேபோன்று, இஸ்ரேலில் நெகவ் பாலைவன பகுதியில் உள்ள விமான தளத்தின் மீது 4 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. எனினும், இதில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியது . இஸ்ரேல் மீது 7 ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஏவப்பட்டன. அவை இடைமறித்து அழிக்கப்படவில்லை என ஈரான் தெரிவித்தது .

எனினும், 79 ஆளில்லா விமானங்கள் மற்றும் 3 ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஆகியவற்றை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்தது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த பதிலடியை இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரியும் உறுதிப்படுத்தி உள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content