விளையாட்டு

IPL Match 33 – பஞ்சாப் அணிக்கு 193 ஓட்டங்கள் இலக்கு

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங்கை துவங்கிய மும்பை அணிக்கு இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இவருடன் களமிறங்கிய ரோகித் சர்மா நிதானமாக விளையாடி 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவருடன் விளையாடிய திலக் வர்மா நிதானமாக ஆடினர். போட்டி முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. மும்பை சார்பில் திலக் வர்மா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

பஞ்சாப் சார்பில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் சாம் கர்ரன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

(Visited 2 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content