விளையாட்டு

IPL Match 17 – பஞ்சாப் அணிக்கு 200 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் 17-வது லீக் போட்டியில் குஜராத்- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்- சகா களமிறங்கினர். இதில் சகா 11 ரன்னில் வெளியேறினார்.

இதனையடுது கில்லுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதானமாக விளையாடிய வில்லியம்சன் 26 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த தமிழக வீரர் சுதர்சன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவர் 19 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பொறுப்புடன் விளையாடிய சுப்மன் கில் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசி வரை அவுட் ஆகாமல் 89 ரன்கள் எடுத்திருந்தார்.

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

(Visited 1 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content