இலங்கை

இலங்கையில் உள்ள தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் தரமற்ற தேங்காய் எண்ணெய் இல்லை என விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள தேங்காய் எண்ணெய் பற்றி நேற்று கருத்துத் தெரிவித்த விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

தரமற்ற தேங்காய் எண்ணெயை இந்த நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், அவ்வாறான தேங்காய் எண்ணெய் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

உரிய ஆய்வுகளின் பின்னரே மீள் ஏற்றுமதி மேற்கொள்ளப்படும் எனவும், இறக்குமதி செய்யப்படும் சில தேங்காய் எண்ணெய்கள் உயர்தரமானவையா என கூற முடியாததால், அவற்றை தரப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content